எள் சாகுபடியில் நாமக்கல் பெண் விவசாயி அபாரம்... 1 ஏக்கரில் 484 கிலோ எள் மகசூல் செய்து சாதனை

நாமக்கல்: 1 ஏக்கரில் 484 கிலோ என எள் மகசூல் செய்து சாதனை படைத்த பெண் விவசாயிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள குஞ்சம் பாளையத்தை சேர்ந்த பாப்பாத்தி என்ற பெண் விவசாயிதான் அவர். பொதுவாக ஒரு ஏக்கரில் 300 கிலோ எள் மகசூல் கிடைப்பதே சாதனை என்று கூறப்படும் நிலையில் பெண் விவசாயின் அபார சாதனையை ஒட்டுமொத்த விவசாயிகளும் பாராட்டி வருகின்றனர்.

எள் சாகுபடியில் அதிக மகசூல் படைத்ததுக்காக விவசாயி பாப்பாத்தியை பாராட்டி முன்னோடி விவசாயி என்ற விருதை பிரதமர் மோடி அண்மையில் வழங்கினார்.  30 ஆண்டுகளுக்கு முன் கணவர் காலமானதால் விவசாயத்தை மேற்கொள்ள தொடங்கிய பாப்பாத்திக்கு தற்போது 61 வயது ஆகியது. குடும்பத்தை காப்பாற்ற வயலுக்கு சென்ற அவருக்கு எள் மகசூல் வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தி இருக்கிறது.

நாட்டின் முதுகு எலும்பான விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்பதே விவசாயி பாப்பாத்தியின் கோரிக்கையாகும்.

Related Stories: