காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் அறிக்கை

சென்னை : வளிமண்டத்தில் நிலவும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வடகிழக்குப் பருவமழை நாளை அல்லது ஓரிரு நாட்களில் நிறைவடையக் கூடும் என்றும் சென்னையை பொறுத்தவரை ஓரளவு பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேக மாறுபாடு காரணமாக,தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த 24 மணி நேரத்தில், ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் ஒரு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.வெப்ப நிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாக கூடும் என்றும் கூறியுள்ளது.

Related Stories: