ஜன. 31ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவக்கம் பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் மத்திய அரசு வட்டாரம் தகவல்

புதுடெல்லி: வரும் 31ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்ெதாடர் தொடங்க உள்ள நிலையில், பிப்.1ம் தேதி மத்திய நிதியமைச்சர் தனது 2வது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்றத்தின்  இரண்டு மாத கால பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.31ம் தேதி தொடங்குகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்.1ம் தேதி, தனது 2வது மத்திய பட்ஜெட்டை சமர்ப்பிக்க வாய்ப்புள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் ஜன.31ம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றஉள்ளார். அதன்பிறகு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்வார்.  பட்ஜெட் அமர்வின் முதல் பகுதி ஜன.31ம் தேதி தொடங்கி பிப்.7ம் தேதி வரை தொடரும். அதன் பிறகு பட்ஜெட் ஆவணங்களை ஆய்வு செய்ய மூன்று வார இடைவெளி விடப்படும்.

தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் பகுதி மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்.3ம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி மாத கடைசி நாளில் பட்ஜெட் தாக்கல் செய்யும் வழக்கத்தை பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2017ம்  ஆண்டு பிப்.1ம் தேதிக்கு மாற்றியது. இந்த மாற்றம் மார்ச் 31ம் ேததிக்குள் பட்ஜெட் செயல்முறையை முடிப்பதற்காக கொண்டு வரப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முதல் நிதியாண்டிலிருந்து புதிய நிதியாண்டுக்கான செலவினங்களைத்  திட்டமிடுவதற்கு பல்வேறு துறை நிதிகளுக்கு அனுமதி அளிக்க வசதியாக இம்முறை பின்பற்றப்பட்டதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: