இலங்கை, சார்ஜாவில் இருந்து 1 கோடி தங்கம் கடத்தல் : விமான நிலையத்தில் 6 பேர் கைது

சென்னை: இலங்கை, சார்ஜாவில் இருந்து சென்னைக்கு 1.10 கோடி மதிப்புள்ள 2 கிலோ 650 கிராம் தங்கக்கட்டிகள் கடத்தி வந்த 6 பேர் சிக்கினர். இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் இலங்கையை சேர்ந்த அசிப் அலிகான் (51), முகமது ரம்சுதீன் (52), ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அசாருதீன் (21), கலந்தர் அப்பாஸ் (30) சஜில் அமின் (41) ஆகியோர் சுற்றுலா பயணியாக சென்று விட்டு வந்திருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அவர்களது உள்ளாடையில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

இதற்கிடையே, நேற்று காலை 7.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து ஏர் இண்டியா விமானம் சென்னை வந்தது. அதில சென்னையை சேர்ந்த நாகூர் அமீது (22) என்பவரை சோதனை செய்ததில் அவரது உள்ளாடையில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த சோதனையில் 6 பேரிடம்  இருந்தும் 20 தங்க கட்டிகளை கைப்பற்றினர். அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர். சுங்கச் சோதனையில் 6 பேரிடம் இருந்தும் 2 கிலோ 650 கிராம் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு 1.10 கோடி என கூறப்படுகிறது.

Related Stories: