வாரத்தில் 4 நாள் மட்டும் வேலை 6 மணி நேரம் உழைத்தால் போதும்: பின்லாந்து இளம் பிரதமர் இன்ப அதிர்ச்சி

ஹெல்சிங்கி: பின்லாந்தில் தொழிலாளர்கள் வாரத்தில் 4 நாட்கள் பணியாற்றினால் போதும் என்ற புதிய திட்டத்தை அந்நாட்டு இளம் பெண் பிரதமரான சன்னா மரீன் முன்மொழிந்துள்ளார். இதனால் விரைவில் இத்திட்டம் அங்கு அமலுக்கு வர வாய்ப்புள்ளது. இந்தியாவில் 8 மணி நேரமாக இருக்கும் சராசரி வேலை நேரத்தை, 9 மணி நேரமாக உயர்த்த மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது. ஆனால், இதற்கு நேர்மாறாக பின்லாந்தில் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி அறிவிப்பை அந்நாட்டு இளம்பெண் பிரதமரான சன்னா மரீன் (34) முன்மொழிந்துள்ளார். அதாவது, பின்லாந்து தொழிலாளர்கள் இனி வாரத்துக்கு 4 நாள் வேலை பார்த்தால் போதும், அதேபோல் இப்போதுள்ள 6 மணி நேரம் அப்படியே தொடரலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் விடுமுறை காலத்தையும், வேலை நாளில் மிச்சமாகும் நேரத்தையும் தங்கள் குடும்பத்தினருடன் கழிக்க முடியும். இதன் மூலம், ஏற்கனவே உள்ள உற்பத்தியை விட மேலும் அதிகரிக்கத்தான் செய்யும் என்றும் சன்னா மரீன் கூறியுள்ளார். இதனால் விரைவில் இத்திட்டம் அமலாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், பிரதமரின் இந்த திட்டம் தொழிலாளர்கள் தரப்பில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சன்னா மரீன் உலகின் இளம்பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் விடுமுறை காலத்தையும், வேலை நாளில் மிச்சமாகும் நேரத்தையும் தங்கள் குடும்பத்தினருடன் கழிக்க முடியும்.

Related Stories: