1901ம் ஆண்டிற்கு பிறகு 7வது மிக அதிகம் வெப்பம் நிறைந்த ஆண்டாக 2019ம் ஆண்டு இருந்தது : இந்திய வானிலை மையம்

டெல்லி : 2019ம் ஆண்டு இயல்பை விட அதிகம் வெப்பமான ஆண்டாக இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், இந்தியாவில் கடந்த 1901ம் ஆண்டிற்கு பிறகு 7வது மிக அதிகம் வெப்பம் நிறைந்த ஆண்டாக 2019ம் ஆண்டு இருந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் இயல்பை விட 0.36  டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகமாக இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பருவமழைக்கு முந்தைய மற்றும் பருவமழை காலங்களில் அதிக வெப்பம் நிலவியது தான் இயல்பை விட அதிக வெப்பநிலை ஏற்பட்டதற்கான காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவின் முதல் 6 வெப்பமான ஆண்டுகள் 2016 (0.71 டிகிரி செல்சியஸ்), 2009 (0.541 டிகிரி செல்சியஸ்), 2017 (0.539 டிகிரி செல்சியஸ்), 2010 (0.54 டிகிரி செல்சியஸ்) மற்றும் 2015 (0.42 டிகிரி செல்சியஸ்)ஆகும். மொத்தம் உள்ள 15 வெப்பமான ஆண்டுகளின் பட்டியலில் 11 ஆண்டுகள் 2005-2019ல் அடங்கும்

இதனிடையே அசாதாரண வானிலை நிகழ்வுகள் காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 1,560 பேர் இறந்துள்ளனர் என்றும் அதில் அதிகபட்சமாக பீகார் மாநிலத்தைச் 650 பலியானதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை, வெள்ளம், வெப்ப அலை, மின்னல், இடி தாக்குதல் ஆகியவற்றின் காரணங்களால் உயிரிழந்தவர்கள் ஆவர். மேலும் கடந்த ஆண்டில் 8 புயல்கள் இந்தியாவை தாக்கியுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: