உள்ளாட்சி தேர்தலில் தோல்வி ஏன்? அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை: எடப்பாடி, ஓபிஎஸ் தலைமையில் நடந்தது

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவைவிட திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு கடும் பின்னடைவாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நேற்று தொடங்கியது. இதையடுத்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று மாலை 6 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமையில் நடைபெற்றது. இதில், உள்ளாட்சி தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததற்கு என்ன காரணம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வரும் 17ம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை கொண்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

* முதல்வருடன் பாமக ஆலோசனை:

பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வென்ற வடமாவட்டச் செயலாளர்களுடனும் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி. நகராட்சி தேர்தலை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே பாமக சார்பில் வென்ற இடங்களில் தலைவர் பதவிகளை ஒதுக்குவது சம்பந்தமாக பேசுவதற்காக பாமக தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, ஆகியோர் முதல்வர் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Related Stories: