கிரிக்கெட் விளையாடி அசத்திய முதலமைச்சர் : அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச்சு; வெளுத்து வாங்கிய எடப்பாடி

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளைாயாட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். சென்னை மாநில கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி, உடல் ஆரோக்யமாக இருந்தால் எந்த வயதிலும் விளையாடலாம் என்று தெரிவித்தார். இந்த விழாவில் அமைச்சர் ஜெயக்குமார், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மிக முக்கியம் என்றும், பொதுமக்களும் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி வலியுறுத்தினார்.

கிரிக்கெட் விளையாடிய முதல்வர்

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கான விளைாயாட்டு போட்டியை தொடங்கி வைத்த முதல்வர், கிரிக்கெட் விளையாடி அசத்தினார். அமைச்சர் ஜெயக்குமார் பந்து வீச முதலமைச்சர் பேட்டிங் செய்து அசத்தினார்.

வெள்ளை சட்டை, வெள்ளை பேண்ட்

விழாவில் பங்கேற்க கிரிக்கெட் வீரரை போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டை, வெள்ளை தொப்பியுடன் விழாவில் கலந்து கொண்டார்.

Related Stories: