சேலம், கரூரில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக கூடுதல் மனுத்தாக்கல்

சென்னை: சேலம், கரூரில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் திமுக கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதுகுறித்து, திமுக தாக்கல் செய்துள்ள மனுவில் சேலம், கரூரில் அதிக முறைகேடுகள் நடந்துள்ளதால் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். சேலம், கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான சிசிடிவி கேமரா பதிவகளை தாக்கல் செய்ய வேண்டும், என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணையை 20ம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: