கடல்வளத்தை ஆராய்ந்து வரைபடமாக்கி பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்; அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

பெங்களூரு: உணவு, தாதுக்கள் நிறைந்த கடல்வளத்தை ஆராய்ந்து வரைபடமாக்கி பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இந்திய அறிவியல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், விண்வெளி ஆராய்ச்சியில் நாம் பெற்ற வெற்றிகளை ஆழ்கடலின் புதிய எல்லையில் பிரதிபலிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். கண்டுபிடிப்புகளுக்கான தரவரிசை குறியீட்டில் இந்தியா 52-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக மோடி தெரிவித்தார்.

அறிவியல் தொழில்நுட்பம், ஊரக மேம்பாடு என்ற மையக்கருத்தை முன்வைத்து இந்த ஆண்டு அறிவியல் மாநாடு நடைபெறுகிறது. 5 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா மற்றும் சர்வதேச புகழ் பெற்ற விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் வருகைதர உள்ளனர். அறிவியல், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த மத்திய மாநில அரசுகளின் உயர் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை முன்னிட்டு பருவநிலை மாற்றம், நவீன வேளாண்மை, உணவு பாதுகாப்பு, பயிர் பாதுகாப்பு, ஊட்டச் சத்து பாதுகாப்பு, ஊரக வளர்ச்சிக்கான அறிவியல் தொழில்நுட்பம், புற்றுநோயை கண்டுபிடிப்பதில் எழுந்துள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என 28 தலைப்புகள் அமர்வுகள் நடைபெற உள்ளன.

பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடுகள் தவிர பொதுமக்கள் பங்கேற்கும் பல கருத்தரங்குகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்முறையாக இந்த ஆண்டு நடைபெறும் அறிவியல் மாநாட்டில் விவசாயிகளுக்காக தனியாக அறிவியல் மாநாடு ஒன்று நடத்தப்படுகிறது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியர் ஸ்டீபன் ஹெல், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் A da E Yonathஆ கியோர் உட்பட நோபல் பரிசு வென்ற பல விஞ்ஞானிகள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு தரப்பில் உரையாற்றுகின்றனர்.

Related Stories: