தனியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசாமி போக்சோவில் கைது: சிசிடிவி கேமரா பதிவு மூலம் சிக்கினார்

சென்னை: தனியாக பள்ளிக்கு செல்லும் மாணவிகளை குறிவைத்து தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னை மயிலாப்பூர், மந்தைவெளி, ராயப்பேட்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் மாணவிகளில், தனியாக நடந்து செல்லும் மாணவிகைள குறிவைத்து சைக்கிளில் சுற்றி வரும் மர்ம நபர் ஒருவர் ஆசை வார்த்தை கூறி, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்த டிசம்பர் 16ம் தேதி ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனியாக பள்ளிக்கு சென்றபோது, சைக்கிளில் வந்த அந்த ஆசாமி, சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை கண்டு மாணவியிடம் நைசாக பேசி மாணவியை கட்டி பிடித்து மூத்தம் கொடுத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.

மாணவி அலறி கூச்சலிட்டதால் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதை பார்த்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சிசிடிவி பதிவுகளுடன் சம்பவம் குறித்து மயிலாப்பூர் அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகார் மீது முறையாக விசாரணை நடத்தாமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் தடுப்பு பிரிவின் கீழ் இயங்கும் மகளிர் போலீசார், புகார் கொடுத்த தலைமை ஆசிரியரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியர் சம்பவம் குறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதையடுத்து, போலீஸ் கமிஷனர் அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளியை உடனே கைது செய்ய கோரி மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதைதொடர்ந்து சிசிடிவி பதிவுகள் மூலம் சைக்கிளில் வந்து தொடர் கைவரிசை காட்டி வந்த மர்ம நபரை தேடி வந்தனர்.

அப்போது மயிலாப்பூர் டுமிங்குப்பம் பகுதியை ேசர்ந்த தர் (40) என்பவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. உடனே போலீசார் தரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கடந்த 6 மாதங்களாக காலை மற்றும் மாலை நேரங்களில் தனியாக பள்ளிக்கு செல்லும் மற்றும் பள்ளி முடிந்து வரும் மாணவிகளை குறிவைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ஸ்ரீதர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்திற்கு பயன்படுத்திய சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: