நீரில் இருந்து புதிய முறையில் மின்சாரம் உற்பத்தி: ஆராய்ச்சியாளர்கள் சாதனை

மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கு பல முறைகள் காணப்படுகின்ற போதிலும் இயற்கை முறையில் சூழலுக்கு பாதிப்பின்றி மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது நீரிலிருந்து மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய பதார்த்தம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டின் சில தேவைகளுக்கு போதிய மின்சாரத்தினை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர மேலதிக மின்சாரத்தினை அயலிலிருக்கும் வீடுகளுக்கும் பகிர்ந்தளிக்க முடியும். குறைந்தளவு நீரினைப் பயன்படுத்தி மின்சாத்தினை உற்பத்தி செய்யும் electrokinetic streaming potential எனும் இம் முறையினை ஹவுகாத்தியிலுள்ள IIT நிறுவனத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே கண்டுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories: