குமரியில் பராமரிப்பற்று கிடக்கும் திருவள்ளுவர் சிலையை சீரமைக்க தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை

கன்னியாகுமரி:  கன்னியாகுமரியின் கடலின் நடுவே உள்ள திருவள்ளுவர் சிலையை தமிழக அரசு முறையாக பராமரிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133-அடி சிலை கடந்த 2000-மாவது ஆண்டில் நிறுவப்பட்டது.  சிலை நிறுவப்பட்டு  20-வது  ஆண்டு தொடங்கும் நிலையில் சிலையை பராமரிக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

அதேபோல சிலைக்கு செல்வதற்கான படகு போக்குவரத்தை அடிக்கடி நிறுத்தப்படுவதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.  இந்த புத்தாண்டிலாவது திருவள்ளுவர் சிலையை முறையாக பராமரித்து நிரந்தர படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்பது தமிழ் புலவர்களின் வேண்டுகோள். அதேபோல கிழக்கில் போடப்பட்டுள்ள விவேகானந்தர் பாறைக்கும், திருவள்ளுவர் சிலை உள்ள பாறைக்கும் நடுவே பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: