செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட உள்ள ஆய்வு ஊர்தியை அறிமுகம் செய்தது நாசா

நன்றி குங்குமம் முத்தாரம்

செவ்வாய்க்கிரத்துக்கு அடுத்த ஆண்டு அனுப்பப்படவுள்ள அமெரிக்காவின் 5-ஆவது ஆய்வு ஊர்தியை நாசா அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாசா விஞ்ஞானிகள் புளோரிடா மாகாணம், கேப்கானவரல் ஏவுதளத்திலிருந்து அடுத்த ஆண்டு ஜூலை மாதம் இந்த ஊர்தி அனுப்பப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

மேலும் இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பதை ஆய்வு செய்வதோடு மட்டுமன்றி, எதிர்காலத்தில் அந்த கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கான சோதனைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர்கள் விளக்கம் அளித்தனர்.

Related Stories: