சீனாவில் உறைந்து கிடக்கும் ஏரியில் படகுப் பந்தயம்: 600 வீரர்கள் பங்கேற்பு

பெய்ஜிங்:  கடும் பனிப் பொலிவால் சீனாவில் உறைந்து கிடக்கும் ஏரியில் நடந்த படகுப் போட்டி பார்வையாளர்களை கவர்ந்தது.  அந்நாட்டின் வடக்கேயுள்ள மங்கோலியா மாகாணத்தில் இந்த பந்தயம் தொடங்கியிருக்கிறது.  2  நாள் நடக்கும் இந்த பந்தயத்தில் சீனா  மட்டுமின்றி 13 நாடுகளை சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.  அவர்கள்  பல்வேறு குழுக்களாக பிரிந்து பனியால்  உறைந்து கிடைக்கும் ரோசோன் லொன்ஸ் ஏரியை படகுகள் மூலம் கிழித்தப்படி சீறிபாய்ந்து  சென்றனர். 

கப்பல்கள் ராட்சத படகுகளில் உள்ளதுப்போல  இந்த படகுகளுக்கு கீழேயும், நடுவில் கத்தியைப்போல கூர்மையான  தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.  அவை படகுகள் பனிக்கட்டியை கிழித்தப்படிச் செல்ல உதவுகிறது.  அதே போல் பனிக்கட்டி வழுக்காதப்படி நன்றாக ஊன்றி இயக்க வீரர்களுக்கு  விசேஷ துடுப்புகள் வழங்கப்பட்டன.  கிட்டத்தட்ட பூஜ்ஜியம் டிகிரி செல்ஸியஸ் வெட்பநிலையில் பணியாள் பாறையைப்போல் மாறிக்கிடக்கும் ஏரியில் பந்தைய எல்லைகள் அழகாக வரையப்பட்டுள்ளன. வழுவழுப்பாக உள்ள பனிக்கட்டி மீது படகுகளை எல்லை கோட்டிற்குள் வேகமாக இயக்கி இலக்கை அடைவதே இந்த பந்தயத்தின் விசேஷம்.

Related Stories: