துறையூர்: துறையூர் அருகே கோட்டபாளையத்திலிருந்து உப்பிலியபுரம் செல்லும் சாலை வழியில் ரைஸ் மில் அருகில் மின்வாரிய டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மரை சூழந்து முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. மேலும் இந்த டிரான்ஸ்பார்மர் மீதும் செடி,கொடிகள் வளர்ந்து படர்ந்துள்ளது. இதனால் அடிக்கடி மின்தடை ஏற்படும் சூழ்நிலையும் உருவாகி வருகிறது. இந்த டிரான்ஸ்பார்மரில் ஏதாவது பழுது ஏற்பட்டால் மின்வாரிய ஊழியர்கள் வந்து உடனே மேலே ஏறிச் பழுதை சரி செய்ய முடியாத அளவுக்கு முட்புதர் மண்டியுள்ளது. மேலும் இந்த புதரில் விஷஜந்துக்கள் இருக்கலாம் என்ற அச்சத்தையும் எற்படுத்துகிறது.