விரைவு செஸ் போட்டி கோனெரு ஹம்பி உலக சாம்பியன்

மாஸ்கோ: ரஷ்யாவில் நடைபெற்ற உலக விரைவு செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் பிரிவில், இந்திய வீராங்கனை கோனெரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிச் சுற்றின் முடிவில் கோனெரு ஹம்பி, லெய் டிங்ஜி (சீனா), அடாலிக் எகடரினா (துருக்கி) ஆகியோர் தலா 9 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்ததால் டை பிரேக்கர் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் அபாரமாக செயல்பட்ட ஹம்பி சீன வீராங்கனை லெய் டிங்ஜியை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார்.

குழந்தை பெற்றுக்கொண்டு 2 ஆண்டுகளாக செஸ் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த ஹம்பி (32 வயது, ஆந்திரா), மீண்டும் விளையாடத் தொடங்கி ஓராண்டுக்குள்ளாகவே உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆண்கள் பிரிவில் நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் 3வது முறையாக உலக விரைவு செஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

Related Stories: