சென்னையில் மாநகராட்சி அதிகாரிக்கு மிரட்டல்விடுத்த கட்சி பிரமுகரை விரட்டியடித்த மக்கள்

சென்னை: சென்னை தரமணி மகாத்மா காந்தி நகரில் நள்ளிரவில் சாலை போடும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகரான குமரேசன் என்பவர் அங்கே சாலை அமைக்க கூடாது என பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரி மூர்த்தி என்பவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை பார்த்த பொது மக்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஆதரவாக களமிறங்கி குமரேசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொது மக்கள் கூறியதாவது இந்த ரோடானது 47 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ரோடு பணியை தடுக்க தனிநபராக ஒருவர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு யார் இந்த அதிகாரத்தை கொடுத்தது, உரிமையெடுத்து மாநகராட்சி அதிகாரியிடம் வாக்குவாதம் செய்கிறார். இதனால் ஊரே பாதிக்கப்படுகிறது  என்பதே பொது மக்களின் வருத்தம். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் மொத்த சாலையையும் குமரேசன் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாகவும் காந்தி நகர் மக்கள் குற்றம்சாட்டினர். ஆனால் சாலை அமைக்கும் இடத்தின் ஒரு பகுதி தனக்கு சொந்தமானது என்றும், இது தொடர்பான வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் குமரேசன் தெரிவித்தார்.

Related Stories: