ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் வாகனங்கள் மீதான தாக்குதலுக்கு தலிபான் பொறுப்பேற்பு

காபூல் : ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அவர்களுடன் அமெரிக்க அமைதி பேச்சுவார்த்தையை தொடங்கியது. பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் காபூலில் நடந்த குண்டுவெடிப்பில் அமெரிக்க வீரர் கொல்லப்பட்டார். இதனையடுத்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை முறித்து கொள்வதாக கடந்த செப்டம்பரில் அதிபர் டிரம்ப் அறிவித்ததார்.

இந்நிலையில், மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. ஆனால்  இந்த மாத தொடக்கத்திலும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டதால் பேச்சுவார்த்தை தடைபட்டது. இந்த முறை வடக்கு காபூலில் உள்ள பக்ராம் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு அமெரிக்க வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்  அமெரிக்க வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.  வாட்ஸ் ஆப் செய்தியில் தலிபான் செய்தி தொடர்பாளர் சபிபுல்லா முஜாகித் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘ஞாயிறன்று இரவு குண்டூசில் அமெரிக்க வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது” என கூறியுள்ளார். இதனால் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தடை ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

Related Stories: