மனைவிக்காக ஓட்டு சேகரித்த பாஜ பிரமுகர் விபத்தில் பலி

சேலம்: சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே கொப்பம்பட்டி ஊராட்சி குட்டிபையன்வளைவு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (45). பாஜ மேச்சேரி ஒன்றிய தலைவராக இருந்தார். இவரது மனைவி உமாமகேஸ்வரி. மேச்சேரி ஊராட்சி ஒன்றியக்குழுவின் 7வது வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.  மனைவி உமாமகேஸ்வரிக்கு ஆதரவாக கடந்த 20ம் தேதி, மகேந்திரன் மற்றும் கட்சியினர், பவளத்தான்பட்டி காட்டுவளவு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மகேந்திரன் மீது பைக் மோதியது. இதில், கீழே விழுந்த மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.  சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு  மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: