கொடைக்கானலில் டிக்டாக் செயலி மூலம் வாக்குச் சேகரிப்பு

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தை மேலும் தீவிரப்படுத்தி இருக்கின்றனர்.  நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட காவேரி புதுப் பாளையம், கோட்டைமேடு  உள்ளிட்ட இடங்களில் அ.தி.மு.க வேப்பாளர்களை  ஆதரித்து அமைச்சர் தங்கமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  ஆரணியில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க  வேட்ப்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கொடைக்கானல் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் சமூக வலைதளம்  முக்கிய பங்காற்றி வருகிறது. மலை கிராமங்களில் டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்கலின் மூலம் வேட்பாளர்கள் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்ப்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் முக்கிய பிரமுகர்கள் வீடு  வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

Related Stories: