லாஸ் வேகாஸ்: அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில், அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். கர்ப்பிணி பெண் உள்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். லாஸ் வேகாஸ் நகரில் நாற்பத்தியொரு பிரிவுகளை கொண்ட 3 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. அங்கு கடும் குளிர் நிலவுவதால், இங்குள்ள குடியிருப்பின் முதல் தளத்தில் ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் ஹீட்டரை போட்டு வைத்துள்ளனர். அதன் பின்னர், அதிகாலை 4 மணியளவில் அங்கு திடீர் திடீரென தீப்பற்றியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது.