நியூயார்க்: சிறுவர்களின் பொம்மைகள், விளையாட்டுப் பொருட்களை தனது ‘யூடியூப்’ சேனலில் மதிப்பீடு செய்து, அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.185 கோடியை அமெரிக்க சிறுவன் ரியான் சம்பாதித்து வருகிறான். டிவி சேனல்களைப்போல் ‘யூடியூப்’ சேனல்களை ஆரம்பித்து அதன் மூலம் பணம் ஈட்டுபவர்கள் அதிகளவில் உள்ளனர். எவ்வளவுக்கு எவ்வளவு பார்வையாளர்களை ஈர்க்கிறோமோ அந்த அளவுக்கு பணமும் கொட்டும். இதன் காரணமாகத்தான் ‘யூடியூப்’பில் ஏராளமான சமையல் வீடியோக்கள், சினிமா விமர்சனங்கள், அரசியல் நையாண்டிகள் என்று பல வலம் வருகின்றன. இந்நிலையில், உலகளவில் ‘யூடியூப்’ சேனல் மூலம் அதிகளவில் சம்பாதிப்போரின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில், ஆச்சரியமான விஷயம், பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது ஒரு சிறுவன். அவன், அமெரிக்காவை சேர்ந்த ரியான் காஜி (8). இவன் தனது ‘யூடியூப்’ சேனல் மூலம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.184 கோடி சம்பாதித்து முதல் இடத்தை பிடித்துள்ளான்.