* ‘டென்னிஸ் எல்போ’ பாதிப்பு காரணமாக முழங்கையில் அறுவைசிகிச்சை செய்துகொள்ள நேரிட்டபோது மனதளவில் மிகவும் உடைந்துபோனேன். மீண்டும் களமிறங்கி விளையாட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என இறைவனிடம் வேண்டாத நாளே இல்லை. அத்தனை மோசமான பாதிப்பு அது. இதில் இருந்து மீண்டு வர மனைவி மற்றும் நண்பர்களின் ஆதரவும் ஊக்கமுமே காரணம் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
* 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்காகத் தயாராகி உள்ள தேசிய ஸ்டேடியத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. ஜமைக்கா தடகள நட்சத்திரம் உசேன் போல்ட் விழாவில் பங்கேற்றதுடன் ஸ்டேடியத்தை சுற்றி ஓடிவந்து ரசிகர்களை மகிழ்வித்தார்.