பாக். தீவிரவாதி ஹபீஸ் சயீத் 2ம் வழக்கில் விசாரணை

லாகூர்: மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜமாத் உத் தவா தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத், சர்வதேச குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவன். இந்தியா உட்பட சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு நெருக்கடி அதிகரித்ததால், ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் அரசு கடந்த ஜூலையில் கைது செய்தது. இவன் மீது தீவிரவாத செயல்களுக்கு நிதி திரட்டியதாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், முதல் வழக்கின் விசாரணை கடந்த 11ம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து 2ம் வழக்கின் விசாரணை லாகூர் தீவிரவாத தடுப்ப சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் விசாரணையை தொடர்ந்து வழக்கு இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: