6 ஆண்டுகளுக்கு முன் பேரழிவை நோக்கி சென்ற பொருளாதாரத்தை மீட்டெடுத்துள்ளோம் : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

புதுடெல்லி: நமது இலக்கை அடைய ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்று அசோசெம் அமைப்பின் 100-வது ஆண்டு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். விழாவில் பேசிய மோடி, 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவது கானல் நீரல்ல என்றும், அந்த இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு நமது பொருளாதாரம் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும், சரிவில் இருந்த பொருளாதாரத்தை நிலைபெற செய்துள்ளோம் என்று மோடி பெருமையுடன் தெரிவித்தார்.

பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த இந்தியர்கள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் என்று மோடி வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரத்தை வேகப்படுத்தவும், நவீனமயமாக்கவும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முன்னேறி வருகிறோம் என்றும், தொழில்துறையினரின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக கவனம் செலுத்தி வருகிறோம் என்றும் மோடி தெரிவித்தார். விவசாயிகள், தொழிலாளர்கள், கார்ப்பரேட்டுகள் ஆகியோருடைய குறைகளை கேட்கும் ஒரு அரசு இந்தியாவில் இருப்பதாக மோடி தெரிவித்தார்.

மாற்றம் கொண்டு வந்தால் எதிர்ப்பு வருகிறது

மாற்றங்களை கொண்டு வரும் போது எதிர்ப்புகளை சந்தித்திருக்கிறோம் என்று அசோசெம் அமைப்பின் 100-வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

Related Stories: