குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து பீகார் மாநிலத்தில் நாளை முழு அடைப்பு பேராட்டத்திற்கு தேஜஸ்வி யாதவ் அழைப்பு

பீகார்: குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து பீகார் மாநிலத்தில் நாளை முழு அடைப்பு பேராட்டம் நடத்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் அழைப்பு விடுத்துள்ளது. குடியுரிமை சட்டதிருத்தம் அரசியலமைப்பு எதிரானது என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. உபி.யின் லக்னோ, கர்நாடகாவின் மங்களூருவில் நேற்று நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் லக்னோவில் ஒருவரும் மங்களூரில் 2 பேரும் பலியாயினர். டெல்லியில் பல இடங்களில் போராட்டம் நடந்ததால் போக்குவரத்து முடங்கியது. பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு உட்பட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த ஒரு வாரமாக போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

ஆங்காங்கே வாகனங்களுக்கு தீ வைப்பு, பொது சொத்துக்களுக்கு சேதம் என வன்முறை சம்பவங்களும் அரங்கேறின. கடந்த 13ம் தேதி தொடங்கி நடந்து வரும் போராட்டங்கள் காரணமாக பல்வேறு இடங்களிலும் பதற்றம் நிலவி வருகின்றது. கேரளாவில் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மேலும் மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் கடந்த 3 நாட்களாக போராட்டம், பேரணி நடத்தி வருகின்றனர். இதே போல் தமிழகத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 23-ம் தேதி பேரணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் குடியுரிமை சட்டதிருத்தத்தை எதிர்த்து பீகார் மாநிலத்தில் நாளை முழு அடைப்பு பேராட்டம் நடத்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் அழைப்பு விடுத்துள்ளது. குடியுரிமை சட்டதிருத்தம் அரசியலமைப்பு எதிரானது என்று தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: