இஸ்லாமபாத்: ‘‘தேசத் துரோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஷாரப்பை, சட்ட அமலாக்கத்துறையினர் எப்படியாவது கைது செய்து மரண தண்டனை உறுதி செய்ய வேண்டும். அவர் இறந்தநிலையில் கண்டுபிடிக்கப்பட்டால், உடலை இஸ்லமாபாத் இழுத்து வந்து 3 நாள் தொங்க விட வேண்டும்’’ என பெஷாவர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு, தேசத் துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து பெஷாவர் உயர் நீதிமன்றம் கடந்த 17ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. தலைமை நீதிபதி வாகர் அகமது சேத் தலைமையில் நீதிபதிகள் நாசர் அக்பர், கரீம் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த 167 பக்க தீர்ப்பில், முன்னாள் அதிபர் முஷராப்புக்கு எப்படி தண்டனை அளிக்க வேண்டும் என்பதையும் நீதிபதிகள் விவரித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: