மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தமிழகத்திற்கு 13 தேசிய விருதுகள்: அமைச்சர் வேலுமணி பெற்றார்

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 4 விருதுகள் உள்பட 13 தேசிய விருதுகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று டெல்லியில் பெற்றுக் கொண்டார். 2019ம் ஆண்டில் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தினை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக 4 தேசிய விருதுகளையும், மாநில ஊரக வளர்ச்சி மற்றும் கிராம ஊராட்சி நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக 1 தேசிய விருதும், ரூர்பன் திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்காகவும் மற்றும் தொகுப்புகளுக்கான இடம் சார்ந்த திட்டமிடலில் சிறப்பாக செயல்பட்டமைக்காகவும் 2 தேசிய விருதுகளும், தீனதயாள் உபாயத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்தமைக்காக தேசிய தங்க விருதும் என மொத்தம் 13 விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகளை மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமரிடம் இருந்து, தமிழக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பெற்று கொண்டார்.

Related Stories: