தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கிய வழக்கு: சாம்சங் நிறுவனத்தின் தலைவர், துணை தலைவருக்கு தலா ஒன்றரை ஆண்டு சிறை

சியோல்: தொழிற்சங்கங்களை மூட முயற்சித்ததற்காகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளை முடக்கிய முயன்ற வழக்கில் சாம்சங் நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணை தலைவருக்கு தலா ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் தயாரிப்பில் முன்னெனியில் இருப்பது தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம். இந்த நிறுவனத்தின் தலைவராக லீ சாங் ஹோனும், துணைத்தலைவராக காங் குயாங் ஹூன் ஆகியோரும் உள்ளனர். தொழிலாளர் சங்கங்களை மூடுவதற்காகவும், சங்க உறுப்பினர்களின் ஊதியத்தை குறைக்கவும், அவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கவும் உத்தரவிட்டதாகவும், தொழிற்சங்க நடவடிக்கைகளை நசுக்குவதாகவும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.

எனினும் இந்த வழக்கில் அவர்கள் உடனடியாக முன்ஜாமீன் பெற்றனர். இதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சில மாதங்களாக விசாரணை நடத்து வந்தது. இது தொடர்பாக சியோல் மாவட்ட மத்திய நீதிமன்றத்தில் நடந்து வந்த விசாரணையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறிய நீதிபதி இருவருக்கும் தலா ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து முன்ஜாமீன் மனுக்கள் ரத்து செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: