குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு அதிமுக எம்பிக்கள் தமிழின துரோகிகள்: தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள் என மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை:  குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: இந்த சட்டத்திருத்தத்தால் இந்தியர்கள் யாரும் பாதிக்கப்பட மாட்டடார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாரே? எடப்பாடி பழனிசாமியை பொறுத்தவரை பிரதமர் மோடி மற்றும், அமித்ஷா, மத்திய அரசு என்ன சொல்கிறதோ, அதை அப்படியே அடிபணிந்து காலில் விழுந்து ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பவர். குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் அதிமுக எம்பிக்கள் தமிழின துரோகிகள் ஆகிவிட்டனர். அவர்களை தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள். சட்டத்திருத்த விவகாரத்தில் திமுகவை, பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளதுடன், திமுகவை கண்டித்து வரும் 20ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்திருக்கிறாரே?

அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.

திமுகவும், தோழமைக் கட்சிகளும் இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளீர்கள். ஆனால் அமித்ஷா, இதை மாற்றுவதற்கான பேச்சிற்கே இடமில்லை என சொல்லி இருக்கிறாரே? தமிழ்நாட்டில் மட்டும் எதிர்ப்பு இல்லை. அகில இந்திய அளவில், குறிப்பாக வடகிழக்கு பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு கிளம்பி கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. எனவே இதற்குப் பிறகாவது மத்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளாரே? அவருக்கெல்லாம் நாங்கள் வேதம் ஓதவேண்டும் என்ற அவசியம் இல்லை.

தங்களுக்கு அழைப்பு விடுத்தால் வருவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் என கூறியிருந்தாரே? அவரிடம் தொலைபேசியில் பேசினேன். ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய 11 கட்சிகளின் தலைவர்களை அழைத்துள்ளோம். தேவைப்பட்டால் அனைத்து அமைப்புகளையும், கூட்டணிக்கு அப்பாற்பட்டு இருக்கும் அனைவரையும் அழைத்து இதுபோன்ற கூட்டம் நடத்தும் போது நிச்சயமாக அவர் அழைக்கப்படுவார். சென்னையில் நடைபெறும் இந்த பேரணியில் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள், மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினர் சார்பில் ஊடகங்கள் மூலமாகக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விவகாரத்தில் ரஜினி தற்போது வரை கருத்து தெரிவிக்கவில்லை. கேள்வி கேட்டாலும் மறுத்துள்ளாரே? அதுகுறித்து அவரிடம் தான் நீங்கள் கேட்கவேண்டும். அதற்கு நான் பதில் சொல் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: