அரண்மனையில் பண்டைய மாயன் நாகரிகத்தின் பழமையான ஒரு பகுதி கண்டுபிடிப்பு

மெக்ஸிகோவில் பண்டைய மாயன் நகரமான உக்ஸ்மலில் உள்ள அரண்மனை ஒன்றில் மறைக்கப்பட்டிருந்த பகுதி ஒன்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இது கி.பி 670 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. 82 அடி நீளமுள்ள இப்பகுதி 22 அடி உயர வளைவுகள், அதன் சுவர்களின் வடிவமைப்பு, கட்டிட கலை, பியூக் சகாப்தத்தில் ஆரம்ப காலத்திலிருந்தே சுண்ணாம்புக் கல்லை நேர்த்தியாக செதுக்கி, வலுவாக அமைக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டும் விதமாக இருக்கிறது.

இதன் மூலம் பண்டைய மாயன் சாம்ராஜ்யத்தின் நாகரிகம், ஆட்சி முறை, பாரம்பரிய பழக்க வழக்கங்கள் பற்றி கண்டிபிடிக்கக்கூடும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Related Stories: