கடல்களற்ற பூமி படத்தை தயாரித்த நாசா விஞ்ஞானிகள்

கடல்கள் இல்லாத பூமி என்ற அனிமேஷன் படத்தை நாசா விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.பூமியின் 70 விழுக்காடு பரப்பு கடல்களால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புயல், மழை, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பெரும்பாலான இயற்கை நிகழ்வுகள் நடந்து வருகின்றன.இந்நிலையில் கடல்களே இல்லாமல் பூமி இருந்தால் எப்படி இருக்கும் என்ற விபரீத யோசனை நாசா விஞ்ஞானி ஒருவருக்கு தோன்றியது. ஜேம்ஸ் ஓ டோனோகு என்ற ஜப்பானிய விஞ்ஞானி இந்த அனிமேஷன் படத்தை டைம்லாப்ஸ் முறையில் தயாரித்துள்ளார்.

முதலில் 10 மீட்டருக்கு கீழே செல்லும் கடலின் நீர்மட்டம் அடுத்த சில நொடிகளில் 130 மீட்டர், 200 மீட்டர் என வேகம் கொள்கிறது. இறுதியில் 5000 மீட்டருக்கும் அப்பால் கடல் நீர் வற்றிப்போவதால் ஏற்படும் விளைவுகள் இந்தப் படத்தில் காட்டப்படுகின்றன. இறுதியாக தண்ணீர் முழுமையாக நீர் வற்றிப்போவதால் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்பிரிக்காவில் பாலை நிலப்பரப்பு அதிகமாவதைக் காட்டியுள்ளது.

Related Stories: