ஜம்மு காஷ்மீர் மக்களுடன் நேரடி பேச்சுவார்த்தையை மோடி தொடங்க வேண்டும்: தேசிய மாநாட்டு கட்சி வலியுறுத்தல்

ஜம்மு:  ‘ஜம்மு காஷ்மீர் மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்,’ என தேசிய மாநாட்டு கட்சி வலியுறுத்தி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதனிடையே, தேசிய மாநாட்டு கட்சியின் மாகாண தலைவர் தேவேந்தர் சிங் ராணா நேற்று நிரூபர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்,   ஜம்மு காஷ்மீரில் அரசியல் மற்றும் ஜனநாயக செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதை உறுதிப்படுத்த பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்களுடன் பிரதமர் மோடி நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. வீட்டு சிறையில் உள்ள அனைத்து தலைவர்களும் உடனே விடுவிக்கப்பட வேண்டும், என்றார்.

Related Stories: