உலகின் மிகவும் பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

உலகில் மிகவும் பழமையான குகை ஓவியங்கள் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுலவேசி தீவில் உள்ள குகையை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்தபோது, அங்கிருந்த சுண்ணாம்புப் பாறைகளில் வரையப்பட்டிருந்த ஓவியங்களைக் கண்டனர்.

அதில் ஆடு, காட்டுப் பன்றி, மான் மற்றும் குதிரை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. சில வேட்டையாடுவது போல வரையப்பட்டிருந்த ஓவியங்களில் மனிதர்களின் உருவம் சிறியதாகவும், விலங்குகளின் உருவம் பெரியதாகவும் இருந்ததால் அக்காலத்திய உயிரினங்கள் பிரமாண்டமாக வளர்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஓவியங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவை 44 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் வரைவதற்கு பயன்படுத்திய மை போன்ற பொருள் குறித்து ஆய்வு நடந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: