மானாமதுரை: மானாமதுரையில் அடிக்கடி ஏடிஎம்கள் பழுதாவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மானாமதுரை புதிய பஸ் ஸ்டாண்டின் அருகில் இடதுபுறம் ஸ்டேட் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. அதே போல ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே ஒரு ஏடிஎம், தேவர்சிலை பகுதியில் ஒரு ஏடிஎம் என பஸ் போக்குவரத்து முக்கிய பஸ் ஸ்டாப்களுக்கு அருகில் ஏடிஎம் மையங்கள் உள்ளன. புது பஸ் ஸ்டாண்டுக்கு தினமும் வரும் நூற்றுக்கணக்கான பயணிகள் இம்மையங்களில் பணம் எடுக்கின்றனர்.
மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் இந்த ஏடிஎம்கள் உள்ளதால் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தங்கள் தேவைகளுக்கு ஏற்ப பணம் எடுக்க வசதியாக உள்ளது. இதுதவிர அருகே உள்ள வசந்தநகர், கேப்பர்பட்டினம், பெமினாநகர், கீழமேல்குடி, ஆனந்தபுரம் பகுதிகளில் வசிப்பவர்களும் பணம் எடுக்க இந்த ஏடிஎம்களை பயன்படுத்தி வருகின்றனர்.