நடக்கும் மீன்

நன்றி குங்குமம் முத்தாரம்

ஆஸ்திரேலியாவைப் பூர்வீகமாகக் கொண்ட அரிய வகை மீன்ரெட்ஹேண்ட். துடுப்புகளை கைகளைப் போல இது பயன்படுத்துகிறது. தரையில் கைகளை ஊன்றி குழந்தை தவழ்வதைப் போல கடலின் மேற்பரப்பில் தவழ்கிற ஆற்றல் வாய்ந்தது ரெட்ஹேண்ட். தண்ணீருக்குள் நீந்துவதை, நடப்பதை அதிகமாக விரும்புகின்ற மீன் இது.

கடலின் ஆழத்தில் வாழும் இந்த மீன் ஒரு சிறிய எல்லையை வகுத்து அதற்குள் மட்டுமே வசிக்கிறது. வேகமாக நீந்த முடியாது என்பதால் தொலைவான பகுதிகளுக்குச் செல்வதில்லை.

ரெட்ஹேண்ட் மீன் இனமே அழிந்துவிட்டது என்று விஞ்ஞானிகள் கருதிக் கொண்டிருக்க, டாஸ்மானியாவின் தென்கிழக்குக் கடல்பகுதிக்கு டைவிங் பயிற்சி சென்றவர்கள் ரெட் ஹேண்டைப் பார்த்து தகவல் சொல்லியிருக்கின்றனர். இப்போதைக்கு உலகில் 20 அல்லது 30 ரெட்ஹேண்ட் மீன்கள் இருக்கலாம்.

Related Stories: