வெங்காயம் திருடிய முதியவர் சிக்கினார்

மதுரை, கோமதிபுரம் தாழைவீதியில் பிரபல பலசரக்கு கடை உள்ளது. இந்த கடைக்கு, நேற்று காலை முதியவர் ஒருவர் வந்தார். அங்குள்ள ஊழியர்களிடம், ‘‘அரிசி வாங்க கடை உரிமையாளரிடம் ரூ.1500 பணம் கொடுத்திருக்கிறேன். அந்த பணத்தை வாங்கிக் கொடுங்கள், அரிசியை அப்புறம் வந்து வாங்கிக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய ஊழியர்கள் கல்லாவில் இருந்து ரூ.1500 பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளனர். பின்னர், முதியவர் சென்றுவிட்டார்.

பணம் கொடுத்த விபரத்தை ஊழியர்கள், உரிமையாளரிடம் தெரிவித்தனர். ஆனால் அவரோ, ‘யார் என்று தெரியவில்லை’ என கூறினார். உடனே உரிமையாளர் வந்து, கடையில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது கடைக்கு வந்த முதியவர் பணத்தை வாங்கியதுடன், 2 கிலோ வெங்காயத்தை நைசாக திருடிச்செல்லும் காட்சிகளும் பதிவாகி இருந்தது. பிற்பகலில் மீண்டும் முதியவர் கடைக்கு வந்து, ‘சீரகம் வேண்டும்’ என கேட்டுள்ளார். அப்போது ஊழியர்கள் அவரை மடக்கிப் பிடித்து அண்ணாநகர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அப்துல் ரகுமான் (50) எனவும் பிரியாணி செய்வதற்காக வெங்காயம் திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டார். பின்னர், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>