கலசப்பாக்கம் அருகே வேர்ப்புழு தாக்குதலால் 50 ஏக்கர் சாம்பார் வெங்காயம் உற்பத்தி பாதிப்பு: விவசாயிகள் வேதனை

கலசப்பாக்கம்: கலசப்பாக்கம் அருகே வேர்ப்புழு தாக்குதலால் 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட சாம்பார் வெங்காயத்தின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வெங்காயம் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அங்கு வெங்காய உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததால் வரலாறு காணாத அளவுக்கு வெங்காயத்தின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி, கீழ்பாலூர் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் சாம்பார் வெங்காயத்தை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். ஆனால் இந்த வெங்காயம் தற்போது வேர்ப்புழு நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள் கண்ணீருடன் கவலை தவிக்கின்றனர். வேர்ப்புழு நோய் தாக்குதலால் தற்போது கிலோ ₹200க்கு விற்கப்படும் சாம்பார் வெங்காயம் மேலும் கிடுகிடு வென விலை உயர்வு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. வேர்ப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட சாம்பார் வெங்காயத்தை பாதுகாக்க வேளாண்மை துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நோய் தாக்குதலில் இருந்து விடுபட தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வெங்காயத்தின் விலை உயர்வால்,  கிராமப்புற சிற்றுண்டிகளில் வெங்காயத்துடன் ஆம்லெட் போட ரூ15ம்,  வெங்காயம் இல்லாமல் ஆம்லெட் போட ரூ10 என விலையை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: