9 ஆண்டில் 75,000 மாணவர்கள் தற்கொலை பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலிங் வகுப்பு: தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் தற்கொலையை தடுக்க கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை:நாடாளுமன்றத்தில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கடந்த 2007ல் இருந்து 2016 வரை இந்தியாவில் 75,000 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு முக்கிய காரணமாக பள்ளி கல்லூரிகள் மற்றும் பெற்றோர்களின் அதிகப்படியான அழுத்தமும், சாதி மத ரீதியான ஒடுக்கு முறைகளுமே இந்த முடிவுக்கு முக்கிய காரணமென்று மனிதவள மேம்பாட்டுத்துறையே ஒத்துக்கொண்டிருக்கிறது. அதில் 2016ல் மட்டும்  9,474 பேர் தற்கொலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

 மாணவர்களிடையே தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கல்லூரி, பள்ளிகளில் மாணவர்களுக்கு வாரம் ஒரு முறை கவுன்சிலிங் வகுப்புகளை நடத்த வேண்டும். மாணவர்கள் மட்டுமில்லாது பேராசிரியர், ஆசிரியர்களுக்கு மாணவர்களிடையே பாகுபாடின்றி நடந்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அப்படி மாணவர்களிடையே பாகுபாடு காட்டும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கைகளையும் அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: