6வது முறையாக ‘தங்கப் பந்து’ விருது லியோனல் மெஸ்ஸி சாதனை

பாரிஸ்: சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ‘பிபா’ சார்பில் வழங்கப்படும் ஆண்டின் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து (பலான் டி ஆர்) விருதை, பார்சிலோனா அணி நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா) 6வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். கடைசியாக 2015ம் ஆண்டில் இந்த விருதை வென்றிருந்த மெற்றி (32 வயது), 2018-19 சீசனில் அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணிகளுக்காக மொத்தம் 54 கோல் அடித்து அசத்தினார். இவரது தலைமையிலான பார்சிலோனா எப்சி அணி ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

சிறந்த வீரருக்கான போட்டியில் லிவர்பூல் அணியின் வர்ஜில் வான் டிக் 2வது இடமும், ஜுவென்டஸ் மற்றும் போர்ச்சுகல் அணி நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 3வது இடமும் பிடித்தனர். ரொனால்டோ, மெஸ்ஸி இருவரும் பலான் டி ஆர் விருதை தலா 5 முறை வென்று சமநிலை வகித்த நிலையில், மெஸ்ஸி 6வது முறையாக தங்கப் பந்தை முத்தமிட்டு முன்னிலை வகிக்கிறார்.

Related Stories: