முன்னாள் முதல்வர் சந்திரபாபு சென்ற பஸ் மீது தாக்குதல் சிறப்பு விசாரணை குழு அமைப்பு: டிஜிபி உத்தரவு

திருமலை: முன்னாள் முதல்வர் சந்திரபாபு சென்ற பஸ் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை அமைத்து ஆந்திர டிஜிபி கவுதம் சவாங் உத்தரவிட்டார்.ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு அமராவதியில் தலைநகர் அமைப்பதற்காக நிலங்களை வழங்கிய விவசாயிகளை சந்திக்கவும், தலைநகரில் கடந்த கால ஆட்சியில் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்ட பணிகள் மற்றும் பிரதமர் மோடி தலைமையில் தலைநகர் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தை பார்வையிடுவதற்காகவும் கடந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது சந்திரபாபு சென்ற வாகனத்தை வெங்கடபாளையம் அருகே சிலர்  வழிமறித்து செருப்பு மற்றும் கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் துள்ளூர் காவல் நிலையம் உள்பட பல காவல் நிலையங்களில் புகார்களை வழங்கினர். இந்நிலையில் ஆந்திர மாநில டிஜிபி கவுதம் சவாங் இதுகுறித்து விசாரணை நடத்துவதற்காக குண்டூர் குற்றப்பிரிவு கூடுதல் எஸ்பி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை ஏற்பாடு செய்தார். இந்த குழு ஏழு நாட்களுக்குள் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும் இந்த சம்பவத்தில் துள்ளூர் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் வழங்கப்பட்ட புகார்கள் அனைத்தையும் இந்த சிறப்பு விசாரணை குழுவே ஏற்று விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: