உலக சாம்பியன் ஹாமில்டன் உற்சாகம்

பார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில் 21வது மற்றும் கடைசி சுற்றாக நடந்த அபுதாபி கிராண்ட் பிரீயில், மெர்சிடிஸ் அணி நட்சத்திர வீரர் லூயிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார் (1 மணி, 34 நிமிடம், 05.715 விநாடி). ரெட் புல் வீரர் வெர்ஸ்டாப்பன் 2வது இடமும் (+16.772 விநாடி), பெராரி அணியின் லெக்லர்க் (+43.435 விநாடி) 3வது இடமும் பிடித்தனர். ஏற்கனவே உலக சாம்பியன் பட்டத்தை உறுதி செய்துவிட்ட ஹாமில்டன், சீசன் முடிவு புள்ளிப் பட்டியலில் மொத்தம் 413 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அவர் 6வது முறையாக உலக கோப்பையை முத்தமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>