நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 5 பேருக்கு குண்டாஸ்

சென்னை: பிரபல நகைக்கடை உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் குற்றவாளிகளை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து வருகின்றனர். அதன்படி, தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தொடர்புடைய புதுப்பேட்ைட, டிரான்ஸ்போர்ட் சந்து பகுதியை சேர்ந்த அமானுல்லா (39), திருவேற்காடு, சுந்தரசோழவரம், ஏழுமலை நகர் பகுதியை சேர்ந்த தனசேகர் (27), திருவல்லிக்கேணி, டாக்டர் நடேசன் ரோடு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (44), கீழ்ப்பாக்கம், தலைமை செயலக காலனியை சேர்ந்த ஸ்ரீராம் (27), மதுரை, மேலமடை, கோமதிபுரத்தை சேர்ந்த சந்தோஷ் (எ) பிரபாகரன் (30) ஆகியோர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில், அவர்கள் 5 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Related Stories: