11,000 டன் வெங்காயம் துருக்கியில் இருந்து வருகிறது

புதுடெல்லி: துருக்கியில் இருந்து 11,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய, எம்எம்டிசி ஒப்பந்தம் செய்துள்ளது. இது அடுத்த மாதம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்காயம் விலை கடும் உச்சத்தில் உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயம் ₹130ஐ தாண்டி விட்டது. இதை தடுக்க, வெங்காயம் இருப்பு வைப்பதற்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ள மத்திய அரசு, மறு உத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெங்காயம் விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து 1.2 லட்சம் டன் இறக்குமதி செய்ய மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது.

இதை தொடர்ந்து மத்திய அரசின் எம்எம்டிசி நிறுவனம் கடந்த மாதம் எகிப்தில் இருந்து 6,090 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய ஆர்டர் செய்தது. இதை தொடர்ந்து 2வதாக துருக்கியில் இருந்து 11,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் எம்எம்டிசி கையெழுத்திட்டுள்ளது. இது அடுத்த மாதம் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக ஆர்டர் செய்யப்பட்ட வெங்காயம், எகிப்தில் இருந்து அடுத்த வாரம் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு வந்து சேரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: