டெல்லியின் நிலைமை கவலையளிக்கிறது காற்று மாசால் விலங்குகள் ‘மாஸ்க்’ போட முடியுமா?: மோடிக்கு கடற்கரை மாடல் அழகி கடிதம்

வாஷிங்டன்: டெல்லி காற்று மாசு கவலை அளிப்பதாகவும், காற்று மாசால் மனிதர்கள் ‘மாஸ்க்’ போட வழியிருந்தாலும், விலங்குகள் எப்படி ‘மாஸ்க்’ போட முடியும் என்று, பிரதமர் மோடிக்கு கடற்கரை மாடல் அழகி கடிதம் எழுதி உள்ளார். கடற்கரை மாடல் அழகியும், முன்னாள் பிக்பாஸ் சிறப்பு விருந்தினருமான பமீலா ஆண்டர்சன் (52), பிரதமர் மோடிக்கு ‘பீப்பிள் ஃபார் தி எத்தியல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ்’ (பீட்டா) அமைப்பின் கவுரவ இயக்குனர் என்ற முறையில் எழுதிய கடிதத்தில் கூறியதாவது: அரசின் கூட்டங்களிலும், செயல்பாடுகளிலும் ருசியான சைவ (முற்றிலும் தாவரத்தால் பெறப்பட்ட) உணவை மட்டுமே வழங்குவதன் மூலம் காலநிலை மாற்றத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வழிநடத்த முடியும். இறைச்சி, முட்டை மற்றும் பால் ஆகியவற்றிற்காக விலங்குகளை வளர்ப்பதால், மனிதனால் தூண்டப்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றங்களில் ஐந்தில் ஒரு பங்கை ஏற்படுகிறது. உங்கள் நாட்டின் கண்டுபிடிப்பு மற்றும் விவசாய வரலாற்றைக் கொண்டு, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சோயா மற்றும் பிற பல்துறை உணவுகளை பயன்படுத்தலாம். நியூசிலாந்து, சீனா, ஜெர்மனி போன்ற பிற நாடுகள் எடுத்த சைவ சார்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நீங்கள் (மோடி) வலியுறுத்தி உள்ளீர். டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எனது கவலைகளை வெளிப்படுத்திக் கொள்கிறேன். குடியிருப்பாளர்கள் மற்றும் முகமூடிகளை அணியவோ அல்லது வீட்டுக்குள் தங்கவோ முடியாத விலங்குகளைப் பற்றியும் நாங்கள் கவலைப்படுகிறோம்.

சமீபத்திய அறிக்கைகளின்படி, 2050ம் ஆண்டில் 36 மில்லியன் இந்தியர்கள் வருடாந்திர கடலோர வெள்ள அபாயத்தை எதிர்கொள்ளக்கூடும். இந்தியாவில் குறைந்தது 21 நகரங்களாவது அடுத்த ஆண்டு நிலத்தடி நீர் நிலைகளை பூஜ்ஜிய அளவை எட்டிவிடும். 2030ம் ஆண்டுக்குள் குடிக்க தண்ணீர் இருக்காது என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.இந்தியாவில் சைவ உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை பாராட்டுகிறேன். சைவ உணவு உண்பதற்கு இந்தியா எளிதான இடமாக உள்ளது. அரிசியின் அழகிய நிறம் மற்றும் சைவ பிரியாணியின் மணம் ஆகியவற்றை நான் இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். இந்தியாவின் உணவுகள் மிகவும் அருமையானவை மற்றும் மாறுபட்டவை. சைவ உணவு உண்பதற்கு பூமியில் எளிதான இடம் இந்தியாதான். எனவே, சைவ உணவு உண்பதை நீங்கள் மேலும் ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: