சுங்கச்சாவடிகளில் செலுத்துவதற்கான பாஸ்டேக் கட்டண நடைமுறை டிச.15ம் தேதி வரை நீட்டிப்பு

புதுடெல்லி: வரும் 1ம் தேதியில் இருந்து அமல்படுத்துவதாக இருந்த பாஸ்டேக் நடைமுறையை, 15ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, பாஸ்டேக் கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டது. பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த தனி வழி உள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் ரொக்கமாக வசூலிக்கப்படுகிறது. அனைத்து சுங்கச்சாவடிகளிலும் டிசம்பர் 1ம் தேதி முதல் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்துவதை கட்டாயம் ஆக்கப்பட உள்ளது எனவும், அதற்குள் பாஸ்டேக் பொருத்தாதவர்கள் இரட்டிப்பு கட்டணம் செலுத்த வேண்டி வரும் எனவும் என மத்திய அரசு கூறியிருந்தது.  

இந்நிலையில், பாஸ்டேக் கட்டாய நடைமுறையை அடுத்த மாதம் 15ம் தேதி வரை நீட்டித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சக அறிவிப்பில் “பாஸ்டேக் நடைமுறைக்கு மக்கள் மாறுவதற்கு வசதியாக கூடுதல் அவகாசம் அளிக்கப்படுகிறது. அனைத்து சாவடிகளையும் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: