மத்திய அரசின் கூடுதல் செலவுக்கு 21 ஆயிரம் கோடி கோரி துணை மானியக் கோரிக்கை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இவற்றுக்கான செலவு 8,820 கோடி உட்பட மத்திய அரசின் கூடுதல் செலவு 21,246.16 கோடிக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கான முதல் துணை மானியக் கோரிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இதில், நிகர ரொக்க செலவு 18,995.51 கோடியாக இருக்கும்.

14வது நிதி கமிஷனின் பங்காக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களுக்கு அவர் 8,820.62 கோடி வழங்கினார். ஐடிபிஐ வங்கியின் முதலீட்டு நிதியாக 2,500 கோடி, மறுமுதலீட்டு பத்திரங்கள் மூலமாக வழங்கப்பட்டது. விண்வெளித் துறை செலவினங்களுக்காக 666 கோடியும், மத்திய போலீஸ் ரேஷன் மற்றும் சம்பள செலவுகளுக்காக 3,387.46 கோடியும் வழங்கப்பட்டது.

Related Stories: