திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாள் காவலில் விசாரிக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி: திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முருகனை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனை நேற்று பெங்களூரில் இருந்து அழைத்து வரப்பட்டு, நேற்றிரவு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரிவேணி அவர்களுடைய இல்லத்தில் ஆஜர்படுத்தினார்கள். ஆஜர்படுத்தியபோது நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது குற்றவியல் நீதிமன்றத்தில் முருகனை ஆஜர்ப்படுத்தினார்கள், அப்போது திருச்சி மாநகர தனிப்படை காவல்துறை சார்பாக முருகனை 14 நாள் காவலில் எடுத்து விசாரிக்க மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 7 நாள் மட்டும் நீதிமன்ற காவலில் வைக்க அனுமதி வழங்கினார். ஆனால் இதனை மறுத்து முருகனின் வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். முருகனின் உடல்நிலையை கருத்தில் கொண்டு 2 நாள் மட்டுமே விசாரணைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டனர். முருகனிடம் லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கு தொடர்பாகவும், வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறாரா? என்பது குறித்து விசாரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் மீதும் உள்ள 1 கிலோ அல்லது 2 கிலோ தங்க நகைகளை மட்டுமே பறிமுதல் செய்ய வேண்டியிருக்கிறது. கர்நாடக போலீசார் கைப்பற்றிய நகைகளை கர்நாடக நீதிமன்றத்தில் மனு அளித்து தமிழக காவல்துறையினர் நகைகளை பெற்றுவிட்டனர். மேலும், தற்போது முருகன் போலீஸ் விசாரணைக்கு உட்கொள்ளப்பட்டதால் மீதும் உள்ள நகைகளையும் மீது விடுவோம் என்று காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Related Stories: