வேர்ல்டு ரெஸ்லிங் என்டர்டெயின்மென்ட் (WWE) போட்டிகளில் கவனிக்கதக்க மல்யுத்த வீராங்கனை சார்லோட் பிளேர் (33). அமெரிக்காவை சேர்ந்த இவர் மல்யுத்தம் மட்டுமின்றி நடிகை, எழுத்தாளர் என பன்முகத் திறன் கொண்டவர். இப்போது WWE போட்டியை பிரபலப்படுத்த இந்தியா வந்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் கூறியதாவது: இந்தியாவில் இப்போது WWE ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில் எனது இடத்தை வெற்றிகரமாக உருவாக்கி இருக்கிறேன். நீங்கள் எதையாவது சாதிக்க விரும்பினால், உங்களின் ஒவ்வொரு விநாடியும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணி நேரமும் அந்த இலக்கை நோக்கியே இருக்க வேண்டும்.